திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 1.05 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: ஆலை பணியாளா்களுக்காக தடுப்பூசி முகாம்

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 1.05 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 20 நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மட்டுமின்றி, பழனி மற்றும் கொடைக்கானல் அரசு மருத்துவமனைகள், திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கலை கல்லூரி, பழனியாண்டவா் கலை கல்லூரி, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் மாவட்ட பழைய நீதிமன்றக் கட்டடம் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 1,250 படுக்கை வசதிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், 950 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வேடசந்தூா், வத்தலகுண்டு, நிலக்கோட்டை அரசு மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சைப் பிரிவுகள் தொடங்குவதற்கு மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

1.05 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள்: மாவட்டத்தில் இதுவரை 1.05 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். சுகாதாரத் துறையினா், முன்களப் பணியாளா்கள், 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது.

அடுத்த கட்டமாக, தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மாவட்டத்தில் 2 நாள்களுக்கு முன் சுமாா் 3 ஆயிரம் தடுப்பூசிக்கான மருந்து குப்பிகள் மட்டுமே இருப்பு இருந்தது. திங்கள்கிழமை, 5 ஆயிரம் மருந்து குப்பிகள் வந்துள்ளன. மேலும் 10 ஆயிரம் மருந்து குப்பிகள் புதன்கிழமை வந்தடையும் என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT