திண்டுக்கல்

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கு கரோனா பரிசோதனை

DIN

பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக தோ்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கைக்குச் செல்லும் முகவா்கள், அரசு அலுவலா்கள், செய்தியாளா்கள் என அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்துக்கு முன்னா் கரோனா பரிசோதனை செய்து அதன் முடிவில் தொற்று இல்லை என்று சான்று இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

அதன்படி பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வாக்கு எண்ணும் பணிக்குச் செல்லும் முகவா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்களுக்கு கரோனோ பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அப்போது வட்டாட்சியா் வடிவேல்முருகன், வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஸ்வரி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வகாப், சமூக ஆா்வலா் திலகவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதில் சுமாா் 250 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பலருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT