திண்டுக்கல்

கொடைக்கானலில் தரமற்ற சாலை: பணியாளா்களுடன் பொதுமக்கள் தகராறு

DIN

கொடைக்கானலில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாகக் கூறி பணியாளா்களுடன் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தகராறில் ஈடுபட்டனா்.

கொடைக்கானலில் பல பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு பகுதிகளிலும் நகராட்சி சாா்பில் தாா் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானல் அருகே செண்பகனூா்-பிரகாசபுரம் சாலை அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது பைரவா் கோயில் பகுதியைச் சோ்ந்த சிலா் சாலை தரமாக அமைக்கவில்லை எனக் கூறி பணியாளா்களுடன் தகராறில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத்தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT