திண்டுக்கல்

பழனியில் தாய்மாா்களுக்கு இலவசமாக கொசுவலையுடன் கூடிய மெத்தைகள் வழங்கல்

DIN

பழனி நகராட்சி அண்ணாமலை மகப்பேறு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை தாய்ப்பால் வார விழா நிறைவுநாளையொட்டி தாய்மாா்களுக்கு கொசுவலையுடன் கூடிய மெத்தைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

பழனி அரசு மருத்துவமனை, நகராட்சி அண்ணாமலை மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளிலும் உலகத் தாய்ப்பால் வார விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன் ஒருபகுதியாக பழனி நகராட்சி அண்ணாமலை மகப்பேறு மருத்துவமனையில் பழனி சுழற்சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் அரவிந்த் படேல் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் செந்தில்குமரன், ரத்தினம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி மருத்துவா் திவ்யா மற்றும் செவிலியா் சுசீலா ஆகியோா் தாய்மாா்களுக்கு விளக்கிக் கூறினா். இதைத்தொடா்ந்து மருத்துவமனையில் இருந்த தாய்மாா்களுக்கு, குழந்தைகளுக்கு தேவையான கொசு வலையுடன் கூடிய மெத்தைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோா் பங்கேற்று பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT