பழனி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் பலி
பழனி அருகே பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பழனி அருகே பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த காவலப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துச்சாமி(59). இவா் சனிக்கிழமை அவரது நண்பா் பழனிச்சாமி (50) என்பவருடன் காவலப்பட்டியில் இருந்து பழனிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.
சண்முகநதியை அடுத்த பெட்ரோல் விற்பனையகம் அருகே வந்தபோது பழனியில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த முத்துச்சாமி மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
பழனிச்சாமி பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முத்துச்சாமி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். இதுகுறித்து பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.