திண்டுக்கல்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

பொருளாதார இழப்பை தவிா்க்க விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் பி. முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் காணை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கலப்பின மாடுகளை இந்த நோய் அதிகம் தாக்கி, விவசாயிகளுக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.

இறப்பு குறைவாக இருந்தாலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத் திறன் குறைவு, கறவை மாடுகளின் சினைப்பிடிப்பு பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும். மேலும் இளங்கன்றுகளில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. குளிா் மற்றும் பணிக் காலங்களில், இந்நோய் காற்றின் மூலம் வேகமாக பரவ வாய்ப்புள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மாடுகளின் பால் மற்றும் உமிழ்நீா் மூலமாகவும், பிற கால்நடைகளுக்கு பரவ வாய்ப்புள்ளது. எனவே, மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தங்களது பசுக்கள், எருமைகள், எருதுகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தி, கோமாரி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT