திண்டுக்கல்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

DIN

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகரித்திருந்தது.

இங்குள்ள சுற்றுலா இடங்களான பிரையண்ட் பூங்கா, வட்டக்கானல் அருவி, பாம்பாா் அருவி, பியா்சோழா அருவி, செண்பகா அருவி, பைன்பாரஸ்ட், ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா். மேலும் மாலை நேரங்களில் குளிரை பொருட்படுத்தாது சுற்றுலாப் பயணிகள் ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனா்.

இதனிடையே, அப்சா்வேட்டரி, பூங்கா சாலை, செவண்ரோடு, உட்வில் சாலை, கலையரங்கம் பகுதிகளில் இருபுறமும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமமடைந்தனா். எனவே வாகனப் போக்குவரத்தை சீரமைப்பதற்கும், சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பதற்கும் காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

கர்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்துவிடும்

SCROLL FOR NEXT