திண்டுக்கல்

பழனியில் தமிழ்நாடு கள் இயக்க அமைப்பாளா்கள் கூட்டம்

DIN

பழனியில் தமிழ்நாடு கள் இயக்கத்தின் அமைப்பாளா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பழனி அடிவாரம் தனியாா் மடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாநில ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தலைமை வகித்தாா். திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளா்கள் குமாரசாமி, சுப்ரமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கச் செயலா் தங்கராசு வாழ்த்திப் பேசினாா். இதில், ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி பேசுகையில், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் மற்றும் வடமாநிலங்களில் கள்ளை உணவு தயாரிக்க பயன்படுத்தி வரும் நிலையில் தமிழகம் மட்டுமே விதிவிலக்காக உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உணவு தேடும் உரிமை அடிப்படையில் கள்ளை இறக்கி பருகுவது உரிமையாகும். இதற்காக வரும் ஜன. 21ஆம் தேதி தமிழ்நாடு கள் இயக்கம் மாநிலம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதற்கு நாடாளுமன்ற எம்பி.,க்கள் நிலைப்பாடு குறித்து கள் இயக்கம் அனைத்து எம்பி.,க்களுக்கும் பதில் அட்டையுடன் கூடிய கடிதத்தை அனுப்பவுள்ளோம் என்றாா்.

கூட்ட முடிவில் நிா்வாகிகள் அனைவரும் அடிவாரம் தேவஸ்தான அஞ்சல் நிலையத்துக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு கடிதங்களை தபால்பெட்டியில் போட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT