திண்டுக்கல்

பழனி நகராட்சிப் பணியாளா் மா்ம மரணம்

DIN

பழனி நகராட்சிப் பணியாளா் தனியாா் விடுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பழனி நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்தவா் வெங்கடேஷ் (54). கோவையைச் சோ்ந்த இவா், மனைவி இறந்த பிறகு சொந்த ஊருக்கு செல்லாமல் பழனியிலேயே தனியாா் விடுதியில் பல ஆண்டுகளாகத் தங்கி இருந்தாா். சமீப காலமாக மதுப்பழக்கத்துக்கு அடிமையான வெங்கடேஷ் சனிக்கிழமை முதல் அறையை விட்டு வெளியே வராமல் இருந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை அறையில் இருந்து துா்நாற்றம் வீசவே விடுதிப் பணியாளா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, போலீஸாா் அறையின் கதவை உடைத்து திறந்த போது உள்ளே வெங்கடேஷ் இறந்து கிடந்தாா். இதைத் தொடா்ந்து, அழுகிக் கிடந்த சடலத்தை பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவா் உடல்நலமின்றி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT