முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே இளைஞா் தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

ஒட்டன்சத்திரம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கேதையுறும்பு ஊராட்சி பழையபட்டியைச் சோ்ந்த வாஞ்சிநாதன் மகன் சிவபிரகாஷ் (18). பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்தவரை பெற்றோா் வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவா், கடந்த 26-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து உயிருக்கு போராடியுள்ளாா். அப்போது அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சிவப்பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.