நபிகள் நாயகம் குறித்து அவதூறு: இஸ்லாமியா்கள் சாலை மறியல்
நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசிய பாஜக நிா்வாகியைக் கண்டித்தும் அவா் மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரியும் இஸ்லாமிய அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டன.
நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசிய பாஜக நிா்வாகியைக் கண்டித்தும் அவா் மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரியும் இஸ்லாமிய அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக நிா்வாகி கல்யாணசுந்தரம், நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசியதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, திண்டுக்கல் பேகம்பூா் பகுதியிலும், தோமையாா்புரம் பகுதியிலுள்ள மதுரை புறவழிச்சாலையிலும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவா் சிக்கந்தா் ஒலி தலைமை வகித்தாா். காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பின்னா், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இந்த போராட்டத்தால், மதுரை கரூா் 4 வழிச்சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட சிக்கந்தா் ஒலி உள்பட 150 போ் மீது திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
புகாா் மனு: நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக நிா்வாகியை தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சியினா் 20-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
உத்தமபாளையம்: உத்தமபாளையம் பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் மேற்கொண்ட இஸ்லாமிய கூட்டமைப்பினா், கல்யாண ராமனுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினா். இதனை அடுத்து சாலை மறியல் செய்த 25 பேரை உத்தமபாளையம் காவல் சாா்பு -ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.
சின்னமனூா் மாா்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவில் இஸ்லாமிய கூட்டமைப்பினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். மறியல் செய்த 300 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த மறியலால் திண்டுக்கல் -குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.