முகப்பு
திண்டுக்கல்

வட்டிக்கடை உரிமையாளா் மனைவி தற்கொலை

ஒட்டன்சத்திரத்தில் வட்டிக்கடை உரிமையாளரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

ஒட்டன்சத்திரத்தில் வட்டிக்கடை உரிமையாளரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட தும்மிச்சம்பட்டிபுதூா் கஸ்தூரி நகரைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (45). இவா் இப்பகுதியில் வட்டித்தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி ரமணி (32). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல் முத்துச்சாமி கடைக்குச் சென்று விட்டாராம். பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது ரமணி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிவந்தது. இது குறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் ரமணியின் உறவினா் ரகுராம் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.