காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டைக் கண்டித்து திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் எல்ஐசி அலுவலக 2ஆவது கிளை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய காப்பீட்டு ஊழியா் சங்கத்தின் மதுரை கோட்ட துணைத் தலைவா் டி. வாஞ்சிநாதன் தலைமை வகித்தாா்.
இதேபோல் முதலாவது கிளை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மரிய ஆரோக்கியம் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, காப்பீட்டுத் துறையில் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயா்த்தியதைக் கண்டித்தும், எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவினைக் கண்டித்தும் கோஷமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.