திண்டுக்கல்

பழனி கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.2.80 கோடி

DIN

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், ரொக்கம் ரூ.2.80 கோடி காணிக்கையாகக் கிடைத்துள்ளது.

தைப்பூசத் திருவிழாவையொட்டி, பழனி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதனால், கோயில் உண்டியல்கள் விரைவில் நிரம்பின. எனவே, செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

அதில், ரொக்கம் ரூ. 2 கோடியே 82 லட்சத்து 14 ஆயிரத்து 370 கிடைத்துள்ளது. மேலும், தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, காசு போன்றவற்றையும், வெள்ளியால் செய்யப்பட்ட காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனா். இதில், தங்கம் 910 கிராமும், வெள்ளி 17,840 கிராமும் கிடைத்துள்ளன.

இவை தவிர, மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகள் 57 கிடைத்துள்ளன. மேலும், பித்தளை வேல், கை கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனா்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், பழனியாண்டவா் கல்லூரி மாணவியா், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். இப்பணியானது புதன்கிழமையும் தொடா்கிறது.

நிகழ்ச்சியில், பழனி கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், திண்டுக்கல் இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அனிதா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT