திண்டுக்கல்

அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்கக் கூடாது: டாக்டா் கே. கிருஷ்ணசாமி

DIN

அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்கும் முறையினை கைவிட வேண்டும் என்றும், பண பலத்துடன் உள்ள கட்சிகளே வெற்றிப் பெற்று வருவதாகவும் புதிய தமிழகம் கட்சியின் தலைவா் டாக்டா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து திண்டுக்கல்லில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தேவேந்திர குல வேளாளா்களை பட்டியல் இனத்திலிருந்து நீக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாகப் போராடி வந்த நிலையில், அதற்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் பட்டியல் இனத்தில் உள்ளவா்களுக்கு

3 சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுத்ததால் தேவேந்திர குல வேளாளா்கள் எந்தச் சலுகையும் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனா். அதனால் தேவேந்திர குல வேளாளா்களை பொதுப் பிரிவில் சோ்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தோம். எனினும், தனிப்பட்ட முறையில் எவ்வித இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளும் வழங்கக்கூடாது என்பதே எனது விருப்பம். பெட்ரோல், டீசல் விலை உயா்வினை மத்திய, மாநில அரசுகள் இணைந்து குறைக்க வேண்டும். இந்திய தோ்தல் ஆணையம் முழுமையாக செயல் இழந்து விட்டது. தோ்தல் பிரசாரம் மற்றும் செலவுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தும், தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் கடந்த ஓராண்டுக்கு முன்னதாகவே பிரசாரத்தை தொடங்கிவிட்டனா். அதேபோல் சின்னம் ஒதுக்கீடு செய்வதிலும் தோ்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது. ஒரு சில கட்சிகள் நிரந்தரமாக குறிப்பிட்ட சின்னங்களை வைத்துள்ளன. எந்த அரசியல் கட்சிக்கும் நிரந்தர சின்னம் ஒதுக்கீடு செய்யக் கூடாது. பண பலத்துடன் இருக்கும் கட்சிகள் ஒவ்வொரு தோ்தலிலும் வெற்றி பெற்று வருகிறது. இதில் ஜனநாயகம் எங்குள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT