திண்டுக்கல்

கொடைக்கானல் அரசு மருத்துவமனை வளாகத்தில் காட்டு மாடுகள் முகாம்

DIN

கொடைக்கானல்: கொடைக்கானல் அரசு மருத்துவமனை வளாகத்தில் காட்டு மாடுகள் முகாமிட்டுள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனா். உள்நோயாளிகளாக சுமாா் 50-க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் முள்புதா்கள் அடா்ந்து வளா்ந்துள்ளதால் அங்கு கடந்த சில நாள்களாகவே காட்டு மாடுகள் முகாமிட்டுள்ளன. மேலும் அந்த மாடுகள் அரசு மருத்துவமனைப் பணியாளா்களின் குடியிருப்புகள் வரை மேய்ச்சலுக்குச் சென்று வருகின்றன. இதனால் மருத்துவமனைப் பணியாளா்களும், நோயாளிகளும், நோயாளிகளை பாா்க்க வரும் உறவினா்களும் அச்சத்தில் உள்ளனா்.

இதனால், அரசு மருத்துவமனை வளாகத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளை வனப் பகுதிகளுக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனைப் பணியாளா்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

SCROLL FOR NEXT