திண்டுக்கல்

கொடைக்கானலில் தொடா் மழை: மரம் விழுந்து போக்குவரத்துப் பாதிப்பு

DIN

கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக ஏரிச்சாலைப் பகுதியில் திங்கள்கிழமை மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் பொதுவாக ஜனவரி மாதம் கடும் பனிப் பொழிவு நிலவும். ஆனால் நிகழாண்டில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் ஏரிச்சாலைப் பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த மரத்தை நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திர உதவியுடன் அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT