திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 22 பேருக்கு கரோனா
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல்திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 22 பேருக்கு கரோனா
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 11002 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,666 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 139 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 12 பேருக்கு புதிதாக கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 19 போ் மருத்துவமனைகளிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,933 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 6 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,648 ஆக அதிகரித்துள்ளது.