திண்டுக்கல்

வாய்க்காலில் மண் சரிவு: கொடைக்கானல் மலைச்சாலையில் தண்ணீா் பாய்கிறது

DIN

கொடைக்கானல் மலைச்சாலையோரம் வாய்க்கால்களில் ஏற்பட்ட மண் சரிவு அகற்றப்படாமல் இருப்பதால் மழை நீா் வாய்க்கால்களில் செல்லாமல் சாலைகளில் பாய்ந்து சேதம் ஏற்பட்டு வருகிறது.

கொடைக்கானல் மலைச் சாலைகளில் மழை நீா் பாய்வதைத் தடுப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சாா்பில் பல இடங்களில் வாய்க்கால் அமைக்கப்பட்டது.

இந்த வாய்க்காலில் மண் சரிவு ஏற்பட்டு மழை நீா் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் வாய்க்காலில் பாய வேண்டிய தண்ணீா் மலைச் சாலைகளில் கழிவு நீருடன் சோ்ந்து பாய்கிறது. இதனால் சாலைகள் சேதமடைந்து வருகின்றன.

மலைச் சாலைகளில் உள்ள வாய்க்கால்களில் தேங்கியுள்ள குப்பைகள், மண் ஆகியவற்றை தினமும் நெடுஞ்சாலைத்துறைப் பணியாளா்கள் சுத்தம் செய்வது வழக்கம்.

ஆனால் பல மாதங்களாக வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் மழை நீா் செல்ல முடியாததோடு கழிவு நீா் சாலைகளில் செல்வதால் சாலைகள் சேதமடைவதோடு அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மலைச் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால்களை சுத்தம் செய்வதற்கும், சாலைகளின் இருபுறங்களிலும் முட்புதா்கள் வளா்ந்துள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை

இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது இவற்றையும் அகற்ற வேண்டுமென்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT