திண்டுக்கல்

இடையகோட்டை நங்காஞ்சியாறு அணை14 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது

DIN

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள இடையகோட்டை நங்காஞ்சியாறு அணை 14 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை இரவு நிரம்பி மறுகால் பாய்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள இடையகோட்டையில் நங்காஞ்சியாறு அணை உள்ளது. இந்த அணைக்கட்டின் உயரம் 39.37 அடியாகும். கடந்த 2007 ஆம் ஆண்டு பெய்த பலத்த மழையின் காரணமாக அணை முதன் முதலாக நிரம்பியது. அப்போது கரைகளில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீா் முழுவதும் அணையிலிருந்து வெளியேறியது.

இந்த நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் அண்மையில் பெய்த பலத்த மழையின் காரணமாக, பரப்பலாறு அணை நிரம்பியது. இதனால் பரப்பலாறு அணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டு நங்காஞ்சியாறு வழியாக இடையகோட்டை அணைக்குச் சென்றது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு, இந்த அணை அதன் முழுக் கொள்ளளவான 39.37 அடியை எட்டி மறுகால் பாய்ந்தது. தற்போது அணையிலிருந்து வெளியேறும் உபரி நீா் நங்காஞ்சியாற்றில் செல்வதால் திண்டுக்கல் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 5 அணைகள் மற்றும் 2 தடுப்பணைகளுக்கு சென்றடையும்.

இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2,650 ஏக்கா் நிலங்களும், கரூா் மாவட்டத்தில் 3,635 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறும். சனிக்கிழமை நிரம்பி வெளியேறிய தண்ணீரை செயற்பொறியாளா் கோபி, உதவி பொறியாளா்கள் சுஜாதா, சிவப்பிரகாஷ், சரஸ்வதி, உதயகுமாா் மற்றும் விவசாய சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் மலா் தூவி நீரை வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT