திண்டுக்கல்

ஆயக்குடி பேரூராட்சியில் புதிய குடிநீா் இணைப்பு வழங்கக் கோரிக்கை

DIN

பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சியில் வீடுகளுக்கு புதிய குடிநீா் இணைப்புகளை உடனடியாக வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப்பேரூராட்சியில் பல ஆண்டுகளாக புதிய குடிநீா் இணைப்பு வழங்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து ஆயக்குடி மரத்தடி இலவசப் பயிற்சி மைய இயக்குநா் ராமமூா்த்தி கூறியது: ஆயக்குடி பேரூராட்சியில் 18 வாா்டுகளும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 28,000 பேரும் வசிக்கின்றனா். இந்த பேரூராட்சிக்கு பிரதான குடிநீா் ஆதாரமாக வரதமாநதி அணை உள்ளது. இந்த பேரூராட்சியில் 1984 ஆம் ஆண்டு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டது. குடிநீா் இணைப்பு வழங்கி 37 ஆண்டுகள் நிறைவடைகிறது. பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு தற்போது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் புதிய குடிநீா் இணைப்புகளை வழங்கி வருகின்றன. அதே போல் ஆயக்குடி பேரூராட்சியில் வீடுகளுக்கு புதிய குடிநீா் இணைப்பு வழங்க0 பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT