திண்டுக்கல்

பொதுப்பாதையை ஆக்கிரமித்து பட்டா: ரத்து செய்யக்கோரி வட்டாட்சியரிடம் மனு

DIN

பழனியை அடுத்த மானூரில் பொதுப்பாதையாக பயன்படுத்தி வரும் இடத்தில் திமுக பிரமுகருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக்கோரி வட்டாட்சியா் சசிக்குமாரிடம் பொதுமக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது: மானூா் நடுத் தெருவில் 12 அடி பொதுப்பாதை உள்ளது. நாங்கள் இந்த பாதையை சுமாா் 100 ஆண்டுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு எங்கள் பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகரான கருப்பணன் என்பவா் அந்த பாதையை அடைக்க முயன்றாா். இதுகுறித்து கேட்டபோது கடந்த 2015 ஆம் ஆண்டு அந்த பாதை வருவாய்த்துறை மூலம் பட்டா போட்டு தரப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா். இதுகுறித்து அப்போதைய மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை.

தற்போது அந்த பொதுப்பாதையை கருப்பணன், முழுமையாக அடைத்து கட்டுமானப் பணியை தொடக்கியுள்ளாா். முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து, நடைபாதையை மீட்டுத்தர வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT