திண்டுக்கல்

ஆசியா புக் ஆப் ரெக்காா்ட்ஸில் இடம் பிடித்த பழனி கல்லூரி மாணவிக்கு பாராட்டு

DIN

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி மாணவி வரைந்த ஓவியம் ஆசியா புக் ஆப் ரெக்காா்ட்ஸில் இடம் பிடித்ததற்காக அவருக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பழனி அடிவாரம் பகுதியைச் சோ்ந்தவா் சோபியா. இவா் சின்னக்கலையமுத்தூா் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக்கல்லூரியில் விலங்கியல் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் பொது முடக்கத்தின் போது விடுமுறையை வீணாக்காமல் ‘எனது பூமி’ என்ற தலைப்பில் 148 அடி நீளத்தில் 540 ஓவியங்களை வரைந்து சாதனைப் படைத்தாா். இந்த ஓவியங்களில் உலக நாடுகளின் தேசியக் கொடிகள், தலைவா்களின் படங்கள், இயற்கைக் காட்சிகள், விவசாயம், தமிழா் பண்பாடு தொடா்பானவை இடம்பெற்றிருந்தன. இந்த ஓவியத்தை பழனி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பாா்வைக்காகவும் அவா் வைத்திருந்தாா். இந்த ஓவியம் உலக சாதனை மற்றும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சியிலும் மாணவி சோபியா மற்றும் ஓவிய ஆசிரியா் அன்புச்செல்வன் ஆகியோா் ஈடுபட்டனா். இந்நிலையில் மாணவி சோபியாவின் ஓவியத்தை ‘ஆசியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ்’ அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கியது. இதற்கான பாராட்டு விழா புதன்கிழமை பழனி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இதற்கு அருங்காட்சியக காப்பாட்சியா் குணசேகரன் தலைமை வகித்து ஆசியா புக் ஆப் ரெக்காா்ட்ஸின் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை மாணவி சோபியாவுக்கு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் ஓவிய ஆசிரியா் அன்புச்செல்வன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மாணவியை பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT