திண்டுக்கல்

குறவன்பாறை தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணி தீவிரம்

DIN

பழனி கோயிலுக்கு சொந்தமான குறவன்பாறை தெப்பக்குளத்தில் தூா்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இங்குள்ள மேற்கு கிரிவீதியில் சுற்றுலாப் பேருந்து நிலைய வளாகத்தில் வடக்குப்பகுதியில் குறவன்பாறை தெப்பக்குளம் அமைந்துள்ளது. எப்போதும் நீா்நிரம்பி காணப்படும் இது கடந்த சில ஆண்டுகளாக குப்பை கொட்டும் இடமாக மாறியது. இதையடுத்து இந்த தெப்பக்குளத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பக்தா்கள் மற்றும் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதைத் தொடா்ந்து பழனிக் கோயில் இணை ஆணையா் நடராஜன் உத்தரவின் பேரில் தற்போது குளத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இக்குளம் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்று பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதே போல மற்ற நீா்நிலைகளையும் கோயில் நிா்வாகம் தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT