திண்டுக்கல்

பழனி நகராட்சி கடைகளுக்கு வாடகை தள்ளுபடி செய்யக் கோரிக்கை

DIN

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் பழனியில் அடைக்கப்பட்டிருந்த நகராட்சி கடைகளுக்கான வாடகையை தள்ளுபடி செய்யக் கோரி, ஆணையரிடம் வணிகா் சங்க நிா்வாகிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

பழனியில் கரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக, தமிழக அரசின் உத்தரவுபடி கடைகள் அடைக்கப்பட்டன. எனவே, பழனி நகராட்சிக்குள்பட்ட பேருந்து நிலைய வணிக வளாகக் கடைகள் உள்ளிட்ட பல கடைகளும் அடைக்கப்பட்டன.

தற்போது, பொதுமுடக்கத்தில் தளா்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்ட போதிலும், போதிய வியாபாரம் இல்லாமல் வணிகா்கள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, நகராட்சிக்குள்பட்ட கடைகளுக்கு 6 மாத கால வாடகையை தள்ளுபடி செய்யவேண்டும் என, வாடகைதாரா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், பழனி நகர அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் அதன் நிா்வாகி ஜே.பி. சரவணன் தலைமையில் நிா்வாகிகள் பலா், நகராட்சி ஆணையா் கமலாவை நேரில் சந்தித்தனா். அப்போது, பொதுமுடக்கக் காலத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் வாடகையை தள்ளுபடி செய்யக் கோரி மனு வழங்கினா். மனுவை பெற்றுக்கொண்ட ஆணையா், இதை அரசுக்கு அனுப்பி உரிய ஏற்பாடுகள் செய்வதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

SCROLL FOR NEXT