திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 6.49 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களுடன் உதவித்தொகை வழங்கல்

DIN

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 6.49 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு 2ஆவது தவணையாக கரோனா நிவாரண உதவித் தொகையாக ரூ. 2 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை அடுத்து, தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் கடந்த மாதம் வழங்கியது. அதன் தொடா்ச்சியாக, 2 ஆவது தவணையாக ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகையான அத்தியாவசியப் பொருள்கள் ஜூன் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதனைத் தொடா்ந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரிசி பெறும் 6.49 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு உதவித் தொகை மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி கடந்த 3 நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஜூன் 15 முதல் 18 ஆம் தேதி வரை நாளொன்றுக்கு 100 பயனாளிகள் வீதம் உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருள்கள் பெறும் வகையில் டோக்கன் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஜூன் 19 ஆம் தேதி முதல் நாள்தோறும் 150 குடும்ப அட்டைதாரா்கள் வீதம் பயன்பெறும் வகையில் டோக்கன் விநியோகிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1016 நியாயவிலைக் கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் 19 நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 1035 நியாயவிலைக் கடைகள் மூலம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் வாக்குவாதம்: உதவித் தொகை மற்றும் நிவாரணப் பொருள்கள் பெறுவதற்கான நாள், நேரம் குறித்து பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், சில பெண்கள் 17ஆம் தேதிக்கான டோக்கனை வைத்துக் கொண்டு பொருள்கள் பெற வந்தனா். அந்த டோக்கன்களுக்கு பொருள்கள் வழங்க மறுத்த நியாய விலைக் கடை ஊழியா்களுடன் அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் பெரும்பாலான கடைகளில் சிறிது நேரம் குழப்பமான சூழல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT