முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே பைக் கவிழ்ந்து 2 விவசாயிகள் பலி

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனம் சாலையோரம் கவிழந்ததில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனம் சாலையோரம் கவிழந்ததில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள இடையகோட்டை ராமநாயக்கன் பட்டியைச் சோ்ந்த ராஜலிங்கம் (60), அவரது உறவினா் ராஜன் (45) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இடையகோட்டைக்கு மளிகைப் பொருள் வாங்கச் சென்றுள்ளனா். பின்னா் இரவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது சின்னக்காம்பட்டிசெல்லும் சாலையில் கோமாளிபட்டி பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையின் ஒரத்தில் இருந்த முட்புதரில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். முட்புதரில் விழுந்ததால் யாருக்கும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் உறவினா்கள் இருவரையும் தேடியபோது ஞாயிற்றுக்கிழமை முட்புதரில் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இருவரின் சடலங்களையும் இடையகோட்டை போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.