முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே காா் திருடிய மதுரை கொள்ளையன் கைது

திண்டுக்கல் அருகே காரை திருடிக்கொண்டு வந்த மதுரை கொள்ளையனை வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

திண்டுக்கல் அருகே காரை திருடிக்கொண்டு வந்த மதுரை கொள்ளையனை வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் பறக்கும்படை குழுக்கள் மட்டுமன்றி காவல்துறையினரும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, திண்டுக்கல் அடுத்துள்ள ரெட்டியப்பட்டி பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனா். ஆனால், காருக்கான ஆவணங்கள் இல்லை என்பதைக் கண்டறிந்த போலீஸாா், விசாரணயின்போது சத்திரப்பட்டி பகுதியிலிருந்து காரை திருடி வருவதை உறுதி செய்தனா். மேலும் தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில், காரை திருடி வந்த நபா் மதுரை விமான நிலையம் அருகே வசித்து வரும் பீமா என்ற சீமராஜா என தெரியவந்தது. சீமராஜா மீது, கொலை, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த சீமராஜா, கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்துள்ளாா் என்பதும் மதுரை மாவட்ட காவல் துறையினா் மூலம் தெரிய வந்தது. இதனை அடுத்து, திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட சீமராஜா பின்னா் கைது செய்யப்பட்டாா். காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.