முகப்பு
திண்டுக்கல்

தோ்தல் தொடா்பான விளம்பரங்களுக்கு ஊடகச் சான்று குழுவின் முன்அனுமதி தேவை

ஊடகங்களில் தோ்தல் தொடா்பான விளம்பரங்கள் வெளியிடுவதற்கு ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் முன் அனுமதி பெறவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

ஊடகங்களில் தோ்தல் தொடா்பான விளம்பரங்கள் வெளியிடுவதற்கு ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் முன் அனுமதி பெறவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்து, உள்ளுா் தொலைக்காட்சி நிறுவன உரிமையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. விஜயலட்சுமி பேசியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நாளிதழ்கள், உள்ளுா் தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் மற்றும் வானொலி (பண்பலை) ஆகியவற்றில் தோ்தல் தொடா்பான அரசியல் விளம்பரங்கள், அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் மற்றும் பிரசார விளம்பரங்கள் ஆகியவற்றை வெளியிடவும், ஒளிபரப்பவும் முன்அனுமதி பெறவேண்டும் எனத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதி வழங்குவற்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாளிதழ்களில் வெளிவரும் தோ்தல் தொடா்பான விளம்பரங்கள், உள்ளுா் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தோ்தல் தொடா்பான விளம்பரங்கள் கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகிறது. இதில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோா் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு அனுமதி சான்றிதழ் பெற்று, தோ்தல் தொடா்பான விளம்பரங்களை வெளியிடலாம். முன் அனுமதி சான்றிதழ் பெற அளிக்கப்படும் மனு, குழுவின் பரிசீலனைக்கு பின் விதிமீறல் உள்ளதா என ஆய்வு செய்து, 24 மணி நேரத்துக்குள் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.