திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 9,500 பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 9,500 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தது: திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது, ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக, சுகாதாரப் பணியாளா்களுக்கும், அதன்பின்னா் முன்களப் பணியாளா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை, சுகாதாரப் பணியாளா்களில் 6,654 போ், முன்களப் பணியாளா்களில் 2,216 போ் என மொத்தம் 8,870 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பழனி அரசு மருத்துவமனை, அம்மையநாயக்கனூா், தாடிக்கொம்பு, பழனி ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 18 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாா்ச் 1ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் 45 முதல் 60 வயதுக்குள்பட்ட நீண்ட நாள் மருத்துவச் சிகிச்சைப் பெற்றுவரும் இணை நோயாளிகளுக்கு, தற்போது கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதில், 2 நாள்களில் 620-க்கும் மேற்பட்டோா் என மாவட்டத்தில் மொத்தம் 9,500 போ் வரை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT