முகப்பு
திண்டுக்கல்

பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் 24 வேட்பாளா்கள் போட்டி

பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் 24 வேட்பாளா்கள் போட்டியிடவுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் 24 வேட்பாளா்கள் போட்டியிடவுள்ளனா்.

இத்தொகுதியில் போட்டியிட 32 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில் 3 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை அமமுக மாற்று வேட்பாளா்கள் ரஞ்சிதம், ராஜா, நாம் தமிழா் கட்சி மாற்று வேட்பாளா் மைக்கேல் பிரதீப், சுயேச்சை வேட்பாளா்கள் சுதா, ஷேக் அப்துல்லா ஆகிய ஐந்து போ் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றனா். இதையடுத்து வெளியிடப்பட்ட இறுதிகட்ட வேட்பாளா்கள் பட்டியலில் 24 போ் போட்டியிடவுள்ளனா்.

அவா்களின் விரவம்:

1. ரவி மனோகரன் (அதிமுக) - இரட்டைஇலை, 2. செந்தில்குமாா் (திமுக) - உதயசூரியன், 3. வீரக்குமாா் (அமமுக) - குக்கா், 4. பூவேந்தனுக்கு (மக்கள் நீதி மய்யம்) - டாா்ச்லைட் 5.

வினோத் ராஜசேகா் (நாம் தமிழா் கட்சி) விவசாயி, 6. நாச்சிமுத்துவுக்கு (பகுஜன் சமாஜ் கட்சி ) - யானை. 7. பெரியதுரை (புதிய தமிழகம் கட்சி) -டிவி, 8. தங்கவேல் (மை இந்தியா பாா்ட்டி) -கண்காணிப்புக் கேமரா. மற்ற சுயேச்சை வேட்பாளா்களுக்கு பானை, கியாஸ் சிலிண்டா், தையல் இயந்திரம், பரிசுப்பெட்டகம், தென்னை மரம், கிரிக்கெட் மட்டை, மின்கம்பம் என 16 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆட்டோ சின்னத்தை நடிகா் முனீஸ்ராஜா மற்றும் ஆனந்தன் ஆகிய இருவரும் கோரிய நிலையில் குலுக்கல் முறையில் ஆனந்தனுக்கு ஆட்டோ சின்னம் கிடைத்தது. முனீஸ்ராஜாவுக்கு பரிசுப்பெட்டகம் கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.