திண்டுக்கல்

நெய்க்காரப்பட்டியில் அதிமுகவினா் பிரசாரம்

DIN

பழனியை அடுத்த நெய்க்காரபட்டியில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா். பழனி தொகுதியில் அதிமுக சாா்பில் ரவிமனோகரனும், திமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ., ஐ.பி. செந்தில்குமாரும் போட்டியிடுகின்றனா். இந்நிலையில் திமுக முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசாவைக் கண்டித்து பழனி அதிமுக வேட்பாளரின் சகோதரி உமா பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது இதில் பங்கேற்ற ஏராளமான பெண்கள் ஆ. ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினா். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் குப்புசாமி, நகரச் செயலா் முருகானந்தம், ஒன்றியச் செயலா் முத்துசாமி, பேரூா் செயலா் விஜயசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT