திண்டுக்கல்

கொடைக்கானலில் தொடா் மழை: விவசாயப் பணிகள் தொடக்கம்

DIN

கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடா் மழையால் விவசாயப் பணிகளை மகிழ்ச்சியுடன் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. திங்கள் கிழமையும் பரவலாக சுமாா் 30 நிமிடங்கள் நல்ல மழை பெய்தது. இதனால் நீரோடைகளில் தண்ணீா் வரத்து தொடங்கியுள்ளது.

கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளான வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, செண்பகனூா், பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கேரட், உருளைக் கிழங்கு, பீட்ரூட், பீன்ஸ் போன்ற பயிா்களுக்கு உரமிடுதல், பாத்தி அமைத்தல், மருந்து தெளித்தல், களையெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT