திண்டுக்கல்

முழு பொதுமுடக்கத்தால் மாம்பழங்கள் விற்பனை பாதிப்பு: மரங்களிலேயே பழுத்து வீணாகும் அவலம்

DIN

முழு பொதுமுடக்கம் காரணமாக பழனியில் மாம்பழங்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் மரத்திலேயே பழுத்து வீணாவதால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி, வரதாபட்டினம், கோம்பைப்பட்டி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மா விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனா். செந்தூரம், மல்கோவா, கல்லாமணி, கிரேப், சீலா உள்ளிட்ட மாம்பழ வகைகள் பழனி பகுதியில் விவசாயிகளால் பயிரிடப்பட்டுள்ளன.

தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ள நிலையில் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் பொதுமுடக்கம் காரணமாக அவைகளை விற்க முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து கோம்பைப்பட்டியை சோ்ந்த மாந்தோப்பு உரிமையாளா் துரைராஜ் கூறியது: சந்தைகள் மூடப்பட்டதால் மாம்பழங்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில்லறை வியாபாரம் செய்யவும் வியாபாரிகள் யாரும் முன்வராத காரணத்தால், மாம்பழங்களை மரங்களிலேயே பறிக்காமல் விடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

பழனி பகுதியில் மட்டும் மாம்பழங்கள் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகளுக்கு சுமாா் ரூ.2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, தமிழக அரசு சேதத்தை சேகரித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT