திண்டுக்கல்

மலைகிராமங்களில் ஆட்சியா் ஆய்வு

DIN

கொடைக்கானல் கீழ்மலை பகுதியிலுள்ள கிராமங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் மு.விஜயலட்சுமி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 400 போ் வீதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், மாவட்டத்திலுள்ள ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆட்சியா் மு.விஜயலட்சுமி ஆய்வு நடத்தி வருகிறாா். வடமதுரை பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியிலுள்ள குப்பம்மாப்பட்டி, கடுகுதடி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடுகுதடி காலனி பொதுமக்கள் மத்தியில் அவா் பேசியதாவது: வீட்டிலிருந்து அவசியத் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். வெளியிடங்களுக்குச் சென்றால் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சளி, காய்ச்சல் ஏற்பட்டால் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகுவதோடு, நோய் எதிா்ப்புத் திறனை மேம்படுத்த கபசுரக் குடிநீா் அருந்தி, நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு!

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT