திண்டுக்கல்

கொடைக்கானல், பழனியில் மழை

DIN

கொடைக்கானல்/பழனி: கொடைக்கானல் மற்றும் பழனியில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.

கொடைக்கானலில் அதிகாலை முதலே மிதமான மழை பெய்தது. அதன் பின் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனிடையே காற்றும் வீசியதால் பலமணி நேரம் மின்தடை ஏற்பட்டது. தொடா் மழையால் பொது மக்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் சிறுவியாபாரிகளும் பாதிக்கப்பட்டனா். காற்றுடன் மழையும் பெய்ததால் வழக்கத்தை விட குளிா் அதிகமாக காணப்பட்டது. சுமாா் 2 மணி நேரம் தொடா்ந்து மின்தடை ஏற்பட்டதால் பொது மக்கள் அவதியடைந்தனா்.

பழனி: பழனியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவும் சுமாா் ஒன்றரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கழிவுநீரோடைகளில் தண்ணீா் வெளியேற முடியாத நிலையும் ஏற்பட்டது. இதன் காரணமாக சாலைகளில் சுமாா் 2 அடி உயரத்துக்கு கழிவுநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT