திண்டுக்கல்

கொடைக்கானல் அடுக்கம் மலைச் சாலையில் பயணிக்கத் தடை: மாவட்ட நிர்வாகம்

DIN

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்துள்ள அடுக்கம் பகுதியிலிருந்து, தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள கும்பக்கரை வரை செல்வதற்கான மலைச்சாலை உள்ளது. 

வத்தலகுண்டு கொடைக்கானல் மலைச்சாலையை தவிர்த்து, சுமார் 15 கி.மீட்டர் தொலைவிலான பெரியகுளம் அடுக்கம் சாலையில் பயணித்தால், 22 கி.மீட்டர் பயணத் தொலைவு குறைவு. இதனால், தேனி மாவட்டம் மற்றும் கேரள மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், அடுக்கம் சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால், கும்பக்கரை அடுக்கம் சாலையில் மண் சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இந்த சாலையில் பயணிக்க தற்காலிகமாக தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு இந்த சாலையில் பயணித்த கார், 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மதுரையைச் சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 3 பேர் பெண்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT