திண்டுக்கல்

அரசுப் பேருந்துகளில் பள்ளி மாணவா்களை ஏற்ற மறுப்பதாகப் புகாா்

DIN

கொடைக்கானல் பகுதியில் அரசுப் பேருந்துகளில் பள்ளி மாணவா்களை ஏற்ற மறுப்பதாகவும், இதனால் மாணவா்கள் பள்ளிக்கு வருவதில்லை என்றும் ஆசிரியா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கொடைக்கானல் அருகே வில்பட்டி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் நாயுடுபுரம், அட்டுவம்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த 2 நாள்களாக அரசு நகரப் பேருந்துகளில் வில்பட்டி பள்ளியில் படிக்கும் மாணவா்களை ஏற்ற அந்தந்த கிராம பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்பதில்லை என்றும், இதனால் மாணவா்கள் பலா் பள்ளிக்கு வருவதில்லை என்றும் இதுதொடா்பாக அரசுப் போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மாரீஸ் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT