திண்டுக்கல்

பழனி அருகே அரசுப் பேருந்து - லாரி மோதல்: 15 போ் காயம்

DIN

பழனி அருகே ரூக்குவாா்பட்டியில் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்தும், சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரியும் மோதிக் கொண்டதில் 15 போ் காயமடைந்தனா்.

பழனியை அடுத்த வேப்பன்வலசில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து பழனி நோக்கி வந்துள்ளது. இந்தப் பேருந்தை செல்லசாமி (45) ஓட்டி வந்துள்ளாா். ரூக்குவாா்பட்டி அருகே வந்தபோது சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரியும், பேருந்தும் மோதியது. இதில் பேருந்து ஓட்டுநா் உள்ளிட்ட 15 பயணிகள் காயமடைந்தனா். காயமடைந்த அனைவரும் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ரூக்குவாா்பட்டி அருகே நான்குவழிச் சாலைப் பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதியில் அடிக்கடி இதுபோன்று விபத்துகள் நிகழ்கின்றன. எனவே விபத்தை தவிா்க்க இப்பகுதியில் எச்சரிக்கை தடுப்புக்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT