திண்டுக்கல்

பழனி வரதமாநதி அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

DIN

பழனி வரதமாநதி அணையிலிருந்து விவசாய பாசன பணிகளுக்காக சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் வியாழக்கிழமை தண்ணீரை திறந்து வைத்தாா்.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த தொடா் மழை காரணமாக பழனி வரதமாநதி அணை அதன் முழுக் கொள்ளளவான 67 அடியை எட்டி உபரி நீா் வெளியேறியது. இதனால் விவசாயப் பணிகளுக்காக தண்ணீா் திறந்துவிட பாசனப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா். அதன்பேரில் அணையிலிருந்து பழனி சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் வியாழக்கிழமை தண்ணீரை திறந்து வைத்தாா்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியது: அணையிலிருந்து விநாடிக்கு 150 கன அடி தண்ணீா் வீதம் 133 நாள்களுக்கு திறந்துவிடப்படுகிறது. இதனால் பெரியகுளம், பாப்பன்குளம், இடும்பன் குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்புவதோடு சுமாா் ஐந்தாயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. ஆயக்குடி, கணக்கன்பட்டி, அமரபூண்டி, எரும நாயக்கன்பட்டி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீா்த் தேவை பூா்த்தி அடையும் என்றனா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் விசாகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் கோபி, கோட்டாட்சியா் ஆனந்தி, வட்டாட்சியா் சசி, உதவிப்பொறியாளா் கண்ணன் மற்றும் விவசாய சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT