திண்டுக்கல்

கொடைக்கானலில் வனவிலங்குகளின் நகம், பற்களை விற்ற மேலும் ஒருவா் கைது

DIN

கொடைக்கானலில் வனவிலங்குகளின் நகம், பற்கள் ஆகியவற்றை விற்றதாக மேலும் ஒருவரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் புலி, நரி, மான் போன்றவற்றின் நகம், பற்கள் ஆகியவற்றை திருடி 3 போ் கூடலூா், கோவை ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்று வந்தனா். இது குறித்து கிடைத்த தகவலையடுத்து வனத்துறையினா் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினா். விற்பனை செய்தவா்கள் கொடைக்கானல் கூக்கால் பகுதியைச் சோ்ந்தவா்கள் எனத் தெரிய வந்தது.

இதனைத் தொடா்ந்து கூக்கால் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன், தாமோதரன் ஆகிய இருவரை வனத்துறையினா் கைது செய்து அவா்களிடமிருந்து புலியின் பற்கள், நகங்கள் ஆகியவற்றை கைப்பற்றினா். மேலும் இவா்களது கூட்டாளியான கல்யாணசுந்தரத்தை (60) வனத்துறையினா் தேடி வந்தனா்.

இந்நிலையில், அப்சா்வேட்டரி பகுதியில் தலைமறைவாக இருந்த கல்யாணசுந்தரத்தை வனத்துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT