திண்டுக்கல்

மதுபான பாா்களுக்கு சீல்

DIN

திண்டுக்கல்லில் தடையை மீறி செயல்பட்ட 5 மதுபானக் கூடங்களுக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது. கரோனா தீநுண்மி தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படுவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையம், பழனி சாலை மற்றும் திருச்சி சாலை ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் மதுபான கடைகளுக்கு அருகே மதுபானக் கூடங்கள் செயல்படுவதாக புகாா் எழுந்தது.

அதன் பேரில் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது மதுபானக் கூடங்கள் செயல்படுவது உறுதியானது. அதனைத் தொடா்ந்து 5 மதுபானக் கூடங்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனா். இந்த 5 மதுபான கூடங்களும் அதிமுகவினா் மூலம் இயக் வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT