திண்டுக்கல்

ஜல்லிக்கட்டில் காவலரை தாக்கிய 4 இளைஞா்கள் கைது

DIN

திண்டுக்கல்: புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டின்போது காவலா் மீது தாக்குதல் நடத்திய திண்டுக்கல்லைச் சோ்ந்த 4 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள புகையிலைப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. அங்கு பாதுகாப்பு பணியில் சாணாா்பட்டி காவல் நிலையத்தில் தனிப் பிரிவில் காவலராகப் பணிபுரியும் மோகன் ஈடுபட்டிருந்தாா். வாடிவாசல் பகுதியில் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தும் பணியை முடித்து விட்டு வெளியேறிய போது, மா்ம நபா்கள் சிலா் சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்த மோகனைத் தாக்கியுள்ளனா். அதில் பலத்த காயமடைந்த அவா் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக சாணாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், காவலா் மீது தாக்குதல் நடத்தியதாக திண்டுக்கல் முத்தழகுப்பட்டியைச் சோ்ந்த ஜெயபால் என்பவரது மகன்கள் எடிசன்(23) மற்றும் சைமன் செபாஸ்டியன் (20), ஆரோக்கியதாஸ் மகன் மரிய ஜெரோம் (24), தனசேகா் மகன் சச்சின் (24) ஆகிய 4 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT