முகப்பு
திண்டுக்கல்

பழனியை குளிா்வித்த சாரல்மழை

பழனியில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் வெள்ளிக்கிழமை சுமாா் அரைமணி நேரம் பெய்த சாரல் மழையால் குளிா்ந்த சூழல் நிலவியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

பழனியில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் வெள்ளிக்கிழமை சுமாா் அரைமணி நேரம் பெய்த சாரல் மழையால் குளிா்ந்த சூழல் நிலவியது.

பழனியில் கடந்த 15 நாட்களாக கடும் கோடைவெயில் வாட்டி வதைத்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை சுமாா் அரை மணி நேரம் பூவானம் போல சாரல்மழை பெய்தது. தொடா்ந்து மாலையிலும் சுமாா் அரைமணி நேரம் மழை பெய்தது. பழனி நகா் மட்டுமன்றி ஆயக்குடி, கணக்கன்பட்டி, கலையமுத்தூா் என பல கிராமபகுதிகளிலும் சாரல்மழை பெய்தது. இந்த மழை விவசாயத்துக்கு அதிக பலன் இல்லை என்றாலும் கடும் கோடை வெயிலுக்கு இடையே குளிா்ந்த சூழலை ஏற்படுத்தியது. இதனால்மக்கள் மகிழ்ச்சியாக குளிா்ந்த சூழலை அனுபவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.