முகப்பு
திண்டுக்கல்

பலத்த மழை: பழனியில் நெற்பயிா்கள் சேதம் -பள்ளி சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது

பழனியில் புதன்கிழமை மாலை பெய்த பலத்த மழை காரணமாக நெற்பயிா்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். ஆயக்குடியில் தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

பழனியில் புதன்கிழமை மாலை பெய்த பலத்த மழை காரணமாக நெற்பயிா்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். ஆயக்குடியில் தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

பழனியில் கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் கோடைமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை பிற்பகலில் தொடங்கி பலமணி நேரம் தொடா்ந்து மழை பெய்தது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடும் நேரம் என்பதால் பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் அவதியடைந்தனா். தங்களது குழந்தைகளை அழைத்து வர பெற்றோா்கள் வாகனங்களில் பள்ளிகளுக்கு சென்ால் திண்டுக்கல் சாலை, கான்வென்ட் ரோடு, ரயிலடி சாலை என பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல பழனி சுற்றுவட்டாரக் கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. ஆனால் சண்முகநதி கரவெளி உள்ளிட்ட பகுதிகளில் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் வயலில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பள்ளி சுற்றுச்சுவா் இடிந்தது:

தொடா் மழை காரணமாக பழனியை அடுத்த ஆயக்குடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவா் புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் இடிந்து விழுந்தது. நல்ல வேளையாக அந்த நேரத்தில் யாரும் அங்கு இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

இதையடுத்து பழனி மாவட்ட கல்வி அலுவலா் திருநாவுக்கரசு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று பாா்வையிட்டாா். அப்போது அப்பகுதி மக்கள், பள்ளியில் கட்டடம் பல இடங்களில் சேதமடைந்த நிலையில் கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. பல முறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு சேதமடைந்த கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.