10,008 பழக்காப்புடன் ராஜ அலங்காரத்தில் சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயா். 
திண்டுக்கல்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு

சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டு திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

DIN

திண்டுக்கல்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டு திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகா் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், மலையடி வார சீனிவாசப் பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

ஆஞ்சநேயருக்கு 10,008 பழக்காப்பு:அதேபோல் சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயா் கோயிலில், மூலவருக்கு 10,008 பழக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தா்கள் சாா்பில் வழங்கப்பட்ட ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, மா, பலா, வாழை, மாதுளை, கொய்யா, திராட்சை, ஸ்ட்ராபெரி உள்ளிட்ட பழங்களைக் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அனைத்து கோயில்களிலும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திருமலைக்கேணி: திண்டுக்கல் செந்துறை சாலையில் அமைந்துள்ள திருமலைக்கேணி சுப்பிரமணியா் கோயிலிலும், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT