முகப்பு
திண்டுக்கல்

குரூப்-7 பி தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

 திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப்-7 பி போட்டித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

 திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப்-7 பி போட்டித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன.

இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் பிரபாவதி தெரிவித்துள்ளதாவது: அரசுப்பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநா்களுக்கு, திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி 7 பி-இல் இணைக்கப்பட்டுள்ள செயல் அலுவலா் நிலை-3 காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த இலவசப் பயிற்சி வகுப்பின்போது, மாதிரித் தோ்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன. எனவே போட்டித் தோ்விற்கு தயாராகும் விண்ணப்பதாரா்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.