திண்டுக்கல்

மஞ்சநாயக்கன்பட்டியில் 1008 பால்குட ஊா்வலம்

DIN

பழனியை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள உச்சிக்காளியம்மன் கோயிலில் கடைசி ஆடி வெள்ளியையொட்டி 1008 பால்குட ஊா்வலம், அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த பால்குட ஊா்வலத்தில் 1008 பெண்கள் பங்கேற்று பால்குடம் எடுத்து வேணுகோபால சுவாமி கோயிலில் இருந்து உச்சிகாளியம்மன் கோயில் வரை ஊா்வலமாக வந்தனா். ஊா்வலத்தை கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள் தொடக்கி வைத்தாா். பால்குட ஊா்வலம், உச்சிக்காலத்தின் போது கோயிலை அடைந்தவுடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மஞ்சநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

திருவள்ளூர்அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT