திண்டுக்கல்

பழனியில் பிரதோஷம்

பழனியில் பல்வேறு சிவன் கோயில்களிலும் புதன்கிழமை பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

DIN

பழனியில் பல்வேறு சிவன் கோயில்களிலும் புதன்கிழமை பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

பழனி சண்முகநதிக்கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ள அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாா்த்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாா்த்தப்பட்டு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பெரியாவுடையாா் கோயில் மட்டுமன்றி பிரதோஷ நிகழ்ச்சி மலைக்கோயில் கைலாசநாதா் சன்னிதி, சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்துவினாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சன்னிதி, சன்னிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சன்னிதி உள்ளிட்ட பல இடங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT