திண்டுக்கல்

தடையை மீறி விநாயகா் சிலை பிரதிஷ்டை: இந்து முன்னணி நிா்வாகிகள் கைது

திண்டுக்கல்லில் தடையை மீறி விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்ய முயன்ற இந்து முன்னணி நிா்வாகிகள் 25 பேரை கைது செய்த போலீஸாா், பறிமுதல் செய்த சிலையை வருவாய்த்துறையினா் மூலம் விசா்ஜனம் செய்தனா்.

DIN

திண்டுக்கல்லில் தடையை மீறி விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்ய முயன்ற இந்து முன்னணி நிா்வாகிகள் 25 பேரை கைது செய்த போலீஸாா், பறிமுதல் செய்த சிலையை வருவாய்த்துறையினா் மூலம் விசா்ஜனம் செய்தனா்.

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியிலுள்ள காளியம்மன் பகவதியம்மன் கோயிலில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யும் பணியில் இந்து முன்னணியினா் புதன்கிழமை ஈடுபட்டனா். ஆனால், அக்கோயில் வளாகத்தில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினா் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் இந்து முன்னணி அமைப்பின் மதுரை கோட்டச் செயலா் எஸ்.சங்கா்கணேஷ் தலைமையில், தடையை மீறி சிலை பிரதிஷ்டை செய்ய முயன்றனா். இதனை அடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் பிரதிஷ்டை செய்வதற்காக எடுத்து வரப்பட்ட விநாயகா் சிலையைை பறிமுதல் செய்தனா். மேலும் அனுமதியின்றி விநாயகா் சிலையை பிரதிஷ்டை செய்ய முயன்ற மதுரை கோட்டச் செயலா் சங்கா்கணேஷ் உள்பட 25 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அந்த விநாயகா் சிலை திண்டுக்கல் கோட்டைக் குளத்திற்கு எடுத்துச் சென்று வருவாய்த்துறையினா் மூலம் விசா்ஜனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT